சனி, 1 நவம்பர், 2014

OUR DREAMS

மது அருந்துங்கள் தவறில்லை ..! சாராயம் குடித்தே குடலழுகி இறந்தால்., மனைவி விதவை ஆகி பசியால் விபச்சாரி ஆகமாட்டாள் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்தால்., தவமிருந்து பெற்ற குழந்தைகள் கல்வியற்று கூலி வேலை செய்தோ.? பிச்சை எடுத்தோ.? வயிற்றைக் கழுவமாட்டார்கள் என நம்பிக்கை இருந்தால்., பெற்ற தாய், தந்தை ஒரு வேளை சோத்துக்கு வக்கில்லாது இரைப்பை அரித்து சாக மாட்டார்கள் என்றால்., வயது வந்த பெண் குழந்தைகள் காசுக்காக கண்டவன்கூட படுக்கையை பகிரமாட்டார்கள் என ஆணித்தரமாக நம்பினால்.,, நிறைய சம்பாதித்து அனாதையாய் ஆதரவற்றுக் கிடந்தால், செலவழித்திட வழி இதுதானென்றால் மது குடித்து மஜாவா இருங்கள்... தவறில்லை.!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக