செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025
பிள்ளை வரம் தருவாரா பிள்ளையார்?
பிள்ளை வரம் தருவாரா பிள்ளையார்?
உண்மையா? வெறும் மூடநம்பிக்கையா?
இதன் மூலம் முன்னோர்கள் நமக்கு சொல்லவரும் கருத்து என்ன?
அரசமர காற்றுக்கு கற்ப பையை நன்கு செயல்படவைக்கும் திறனும் சிறு சிறு கோளாறுகளையும் நீர்கட்டி உட்பட சரி செய்யும் சக்தி உண்டு.
அதனால்தான் நம் பெரியவர்கள் திருமணம் ஆன புது பெண்களையும், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களையும்…
அரசமரத்தடி விநாயகரை தினமும் 101 முறை 48 நாட்களுக்கு வலம் வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கைகூடும் என்று கூறினார்கள்.
விஷயம்.அரசமரத்தில் இருக்கிறது.
சும்மா அரசமரத்தை சுற்றச் சொன்னால் கேட்கமாட்டார்கள் என்றும் மனதையும் ஒருநிலைப்படுத்த முடியாது என்பதால்…
ஒரு பிள்ளையாரை வைத்து அதன் பின்னால் அரசமரத்தையும் வைத்து மனதை ஒருநிலைப்படுத்தி சுற்றிவரச்சொன்னார்கள்.
நம் பெண்களுக்கு அரசமரத்தடி பிள்ளையாரை பிடித்த காரணம் இதுதான்.
தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும்
மூடநம்பிக்கை இல்லை.
எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…
திருட்டு திராவிட பகுத்தறிவாளர்கள் சொன்ன அனைத்தும்தான் மூடநம்பிக்கை.
புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
தோப்புகரணம் போடுவது தண்டனையா? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா?
தோப்புகரணம் போடுவது தண்டனையா? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா?
யோசித்தோமா? இல்லையே?
நமது சிறுமூளை, பெருமூளை செயல் நரம்புகள் காது மடல்களில்தான் வந்து முடிகின்றன.
நாம் இரு காது மடல்களையும் பிடித்துக்கொண்டு அமர்ந்து எழும்போது..
நம் இரு மூளையின் செயல் நரம்புகள் தூண்டபட்டு நமது மூளை நன்கு செயல்படத்தொடங்கும்.
ஆகவேதான் பள்ளியில் மக்கு மாணவர்களை தோப்புகரணம் போடவைத்து புத்திசாலியாக்கி வெற்றி பெற வைத்தார்கள்.
மற்றவர்களை இலவசமாக விநாயகர் முன் போடவைத்து சுறுசுறுப்பாக இருக்க வைத்தார்கள்.
அதை ஏன் விநாயகர் முன்னிலையில் போடனும்?
அப்பத்தான் நல்லா படிப்பு வரும் என்று சொல்லி போடச்சொல்வார்கள்.
காரணம் அதே சிந்தனையில் தோப்புகரணம் போடும்போது மனது ஒருநிலைப்பட்டு படிப்பில் கவனம் வரும் என்றுதான்.
இதை நமக்கு மூடநம்பிக்கை என்று கிறுத்துவ ஆங்கிலேயனும், திருட்டு திராவிடனும் சொல்லி ஏளனம் செய்து செய்யவிடாமல் மறக்கடித்துவிட்டு
இதையே அவர்கள் கார்பரேட் மூலம் “ சூப்பர் பிரைன் யோகா ” என்று பல ஆயிரம் கோடிகள் வியாபர பொருளாக்கி சம்பாதிக்கிறார்கள்.
நான் சொல்வது பொய் என்று உணர்ந்தால்
நீங்களே கூகுளில் சூப்பர் பிரைன் யோகா என்று தேடிப்பாருங்கள் உங்களுக்கு நாம் எப்படி ஏமாற்றபட்டு வந்திருக்கிறோம் என்ற உண்மை புரியும்.
தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.
எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…
புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
விநாயகர் முன்னிலையில் தலையில் குட்டி போடுவது ஏன்?
விநாயகர் முன்னிலையில் தலையில் குட்டி போடுவது ஏன்?
மருத்துவமே என்றால் ஆச்சரியமா இருக்கா? ஆனால் அதுதான் உண்மை.
நாம் தலையில் குட்டிக்கொள்ளும் முன் நெற்றியின் மேல் இருபுறமும் TEMPLER LOBE.உள்ளது.
இந்த இடத்தில்தான் நம் ஞாபக சக்தியை தூண்டும் நாடிகள்/ நரம்புகள் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் மெதுவாக குட்டிக்கொள்வதால் இந்த நாடிகள்/ நரம்புகள் தூண்டி விடப்படுகின்றன.
இதனால் உடம்பில் சுறுசுறுப்பும் உள் எழுச்சியும் உண்டாகிறது. ஞாபக சக்தி மீட்கப்படுகிறது.
நெற்றிப்பொட்டில் நாம் குட்டிக்கொள்ளும்போது அங்கே உள்ளடங்கி இருக்கும் அமிர்த கலசம் லேசாக திறந்து அதில் உள்ள அமிர்தம் உடல் முழுவதும் பரவும் என்று யோகிகள் கூறுகிறார்கள்.
இதனை மனதில் கொண்டுதான் ஆசிரியர்கள் மாணவர்களை முன் நெற்றியில் குட்டி தண்டிப்பது போல் ஞாபக சக்தியை தூண்டிவிட்டு புத்திசாலியாக்கினார்கள்.
மற்றவர்கள் விநாயகர் முன்னிலையில் தலையில் குட்டி போட்டு ஞாபக சக்தியை பெருக்கி கொண்டார்கள்.
தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.
எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…
புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடவேண்டும்?
விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடவேண்டும்?
பின்னர் அந்த விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கச்சொன்னார்கள் ?
பக்தியா? மூடநம்பிக்கையா?
நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்கு தெரியாமலே புரியாமலே பழக்கமாக்கிவிட்டார்கள்.
அதில் இதுவும் ஒன்று…
ஆடி மாதத்தில் பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள வண்டல் மணல்களை அடித்து சென்று இருக்கும்.
அதனால் ஆற்றில் நீர் பூமிக்கு கீழே இறங்காமல் நேராக சென்று கடலில் கலந்து வீணாகிவிடும், (அந்த காலத்தில் இப்போது இருப்பது போல தண்ணீர் தேக்க அணைகள் இல்லை).
ஆனால் களிமண் இருக்கும் இடத்தில் தண்ணீர் உறிஞ்சி பூமிக்கு கீழே சென்று நிலத்தடி நீர் பெருகும்.
அதுதான் வறட்சி காலங்களிலும் ஆற்றில் நீர் வராத இல்லாத காலங்களிலும் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் உதவும்.
அதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆடிபெருக்கில் வெள்ளம் வரும்போது ஆவணி சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தியன்று ஒவ்வொரு வீட்டிலும் களிமண்ணால் விநாயர் சிலை செய்து வழிபட்டு ஆற்றில் கரைக்கச்சொன்னார்கள்.
அதை ஏன் மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து ஆற்றில் கரைக்கவேண்டும்?
ஈரக்களிமண் ஆற்று நீரின் வேகத்தில் சீக்கிரம் கரைந்து சென்றுவிடும். சற்று காய்ந்த களிமண் கரையாமல் அப்படியே ஆற்றின் கீழ் சென்று படிந்துவிடும்.
இதனால் ஆற்றில் வரும் நீர் களிமண்ணால் உறிஞ்சப்பட்டு கீழே நிலத்தடி நீராக சென்று கொண்டே இருக்கும்.
இது அன்றைய ஆற்றங்கரை நாகரீகத்தின் தண்ணீர் ஆதாரத்திற்கு முக்கிய காரணம்.
இதையே வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஆவணி மாதத்தில் களிமண் கொண்டுபோய் ஆற்றில் போட்டுவிட்டு வாருங்கள் நல்லது என்று சொன்னால் எத்தனை பேர் கேட்பார்கள்.?
அதுமட்டுமில்லை அன்று எந்தவித தொழில்சாலைகளும் இல்லாத காலத்தில் ...
விவசாயிகளிடம் இருக்கும் பணம் மற்ற கைத்தொழில் செய்பவர்களுக்கு சுழற்சி ஆகவேண்டும்.
ஆகவே இதை ஒரு பண்டிகையாகவும் கொண்டாடச்சொன்னார்கள்.( தற்சார்பு பொருளாதாரம்)
இது தெரியாதவர்கள் இன்று விநாயகர் சிலைகளை பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்து ஆற்றிலும் கடலிலும் போட்டு நீர்நிலைகளை பாழ்படுத்தி வருகிறார்கள்.
இதையே களிமண்ணில் செய்து நீர் நிலைகளில் கரைத்தால் நமக்கு நிலத்தடி நீர் என்ற மிகுந்த பலன் உண்டு..
நம் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.
நம் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக உருவாக்கப்பட்டவையே.
புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
ஜனாதிபதி ஆளுனர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது....
நாம் ஏற்கனவே குடியரசுத் தலைவர் கேட்ட 14 கேள்விகளுக்கான வழக்கு பற்றிய விவாதங்களை அவ்வப்போது சுருக்கமாகத் தெரிவிக்கிறோம்.
அவ்வகையில் இன்று மகாராஷ்ட்ராவிற்காக களம் இறங்கினார் இந்தியாவின் அதி புத்திசாலி வக்கீல் ஹரிஷ் சால்வே.
இன்று அவரிடம் நீதிபதிகள் அதிக அளவுக்குக் கேள்விகள் கேட்கவில்லை.
காரணம் மனுஷன் இன்று ஒவ்வொரு சட்டப்பிரிவையும் அடுக்கி கோர்ட்டுக்கே வழிகாட்டியாக இருந்தார்.
அவருடைய பேச்சைக் கேட்டால் பெரிய ஏழரையை தமிழக கவர்னர் வழக்கில் இழுத்துட்டோம் போலன்னு உச்ச நீதிமன்றம் நினைக்க வாய்ப்புள்ளது. அந்தளவுக்கு அவரது வாதங்கள் அமைந்தன.
அவர் முன் வைத்த கருத்துகளின் சுருக்கம்.
1. ஒரு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, (கவர்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டால்) குடியரசுத் தலைவர் ஒப்புதல் இல்லாமல் மசோதா சட்டமாகாது.
அந்தளவுக்கு அதிகாரம் மத்திய அரசுக்குத் தான் உள்ளது. அதை மாற்றி சுதந்திரமான பெடரல் வேண்டுமானால் அரசியல் சட்டப் பிரிவு 201ஐ மாற்றம் செய்ய வேண்டும்.
ஆர்ட்டக்கிள் 201 குடியரசுத் தலைவருக்கு கால வரையறை செய்துள்ளதா?
அப்படி எல்லாம் , இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்கள் செய்யவில்லை. எனவே பெடரல் நேஷன் என்பது மத்திய அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டது தான்.
(Framers have created a system where Union can refuse a Bill passed by assembly what is uncharitably characterised as veto. It exists, unless we rewrite Article 201, he says. ) !!!
2. கவர்னருக்கு எல்லாம் டைம் லிமிட் செட் செய்யப்படவில்லை.
மேலும் அவர் ஏன் பில்லை மூன்று மாதத்திற்குள் அனுமதிகவோ, நிராகரிக்கவோ, குடியரசுத் தலைவருக்கு அனுப்பவோ இல்லை என்ற கேள்வியை இந்த கோர்ட் கேட்க முடியாது.
அதற்கு ஆர்டிக்கிள் 361 (The President, or the Governor or Rajpramukh of a State, shall not be answerable to any court for the exercise and performance of the powers and duties of hi s office or for any act done or purporting to be done by hi m in the exercise and performance of those powers and duties) ஐ மேற்கோள் காட்டி,
என்னுடைய வேலையைச் செய்யும் போது , அதற்கு நீ ஏன் இன்னும் செஞ்சு முடிக்கவில்லை என்ற கேள்வியை கவர்னரை நோக்கிக் கேட்கும் அதிகாரம் எந்த நீதிமன்றத்திற்கும் கிடையாது என்று விளாசினார்.
அதற்குக் குறுக்கிட்ட நீதிபதிகள், அப்ப கவர்னர் எவ்வளவு கால தாமதம் செய்தாலும் , மாநிலங்கள் எங்களை அணுகினால் நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா என்று கேட்டனர்.
3. இதற்கு ஹரிஷ் சால்வே கொடுத்த பதில் தான் அட்டகாசமானது.
ஆமாம்! மாநில அரசோ/ மத்திய அரசோ கொண்டு வந்த சட்டத்தில் பிழை இருந்தால் , எவர் வேண்டுமானாலும் கோர்ட்டை அணுகலாம்.
அப்போது கவர்னரிடம்/ குடியரசுத் தலைவரிடம் பில் சம்பந்தமான ஒப்புதல் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்று கவர்னரிடம் விளக்கம் கேட்கலாம்.
ஆனால் நீ ஏன் இந்த வேலையை இப்ப செய்யலன்னு கேட்கும் அதிகாரம் கோர்ட்டுக்குக் கிடையாது . அதுதான் கவர்னருக்கு உள்ள Discretionary Power என்றார்.
4. ஆர்டிக்கிள் 200 கவர்னருக்கு டைம் லைன் செட் செய்யாத போது கோர்ட்டுக்கு டைம் லைன் செட் செய்ய எந்த உரிமையும் கிடையாது என்றார்.
(Mr. Salve says Article 200 does not give any preconditions for the Governor to give assent, withhold or reserve Bills. Then, how is it possible to make a judicial decision on his bonafide?)
5. கவர்னரும்/குடியரசுத் தலைவரும் ஒப்புதல் கொடுக்காமல், கோர்ட்டே ஒரு பில்லுக்கு ஒப்புதல் கொடுக்க முடியும் என்பது இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கே முரணானது.
கவர்னர், குடியரசுத் தலைவர் இருவருமே உங்களைப் போன்ற உயர் பதவியை வகிப்பவர்கள்.
இந்த நாட்டில் இவர்கள் ஒப்புதல் இல்லாமல் கோர்ட்டே பில்லுக்கு ஒப்புதல் கொடுத்தால் எதற்கு ஒவ்வொரு சட்டப்பிரிவும் தேவை என்று இன்று கேள்வி மேல் கேள்வி கேட்டு தனது உரையை முடித்தார் ஹரிஷ் சால்வே.
இன்று நீதிபதிகள் ஹரிஷ் சால்வேவின் வாதத் திறமை முன்பாக அதிக அளவுக்குக் கேள்விகளே எழுப்பவில்லை.
ஒரு கேள்வி கேட்டால், இரண்டு விளக்கங்களைக் கொடுத்து விட்டு மனுஷன் ரெண்டு கேள்விகள் கேட்கிறார்.
நீதிபதிகள் Continue ன்னு சொல்லிவிட்டு அமைதியாகி விடுகிறார்கள்.
மத்தியப் பிரதேச அரசுக்கு ஆஜரான வக்கீலும், நீங்க பில்லுக்கு ஒப்புதல் கொடுத்தால் கவர்னரும், குடியரசுத் தலைவரும் எதற்குன்னு ஒரு கேள்வியைக் கேட்டு வச்சிருக்கார்.
நாம் மீண்டும் சொல்கிறோம், திரும்பவும் சொல்வோம்.
இந்த வழக்கு மிக முக்கியமான வழக்கு. இதில் அதிக அளவுக்கு மத்திய அரசே வெல்ல வாய்ப்புள்ளது.
ஆனாலும் யாரும் தங்களுக்கான அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். வழக்கு சூடு பிடித்துள்ளது.
இதுபோன்ற முக்கியமான விவாதங்கள் வரும் போது மீண்டும்எழுதுகிறேன்.
சுந்தர்ஜி
SANGI IT WING
திங்கள், 25 ஆகஸ்ட், 2025
உலகத்தை யார் படைத்தார்?
முஸ்லிம்கள் என்று குரானில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை..
கிறிஸ்டியன் என்று பைபுளில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.
அப்போது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்டியன் என்ற மதமே கிடையாது. ஏசு என்பவரே கிடையாது.
அதற்கு முன்னர் உலகம் இருந்ததா? இல்லையா?
எந்த உலகத்தில் ஏசுவும் நபியும் பிறந்து
எந்த உலகத்தை படைத்தார்கள்?
எந்த மக்களை படைத்தார்கள்?
ஏசுவும் நபிகளுக்கும் முன்னர் உலகம் இருந்தது மக்கள் வாழ்ந்தார்கள் என்றால்,,,
அந்த உலகத்தை படைத்தது யார்?
அந்த மக்களை படைத்தது யார்?
சுந்தர்ஜி
SANGI IT WING
வரி சதவீத வித்தியாசம்
அரசை ஏமாற்றி பொய் கணக்கு எழுதி வரி கொடுக்காமல் ஏமாற்றும் கயவர்கள்தான் சமூக ஊடகத்தில் கம்பு சுத்துவார்கள்..
திருட்டு திராவிட விடியல் நாதாரிகள், நடுசெண்டர்கள்
வரிசையில் வந்து ஒப்பாரி வைக்கலாம்...
சுந்தர்ஜி
SANGI IT WING
பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்தம் நடவடிக்கைக்குப் பிறகு
அதில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்களுடன் வெளியிட்டிருக்கிறது.
இந்தப் பெயர் நீக்கத்துக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது,
இதுவரை இரண்டே இரண்டு ஆட்சேபனை தான் வந்துள்ளது.
வாக்குத்திருட்டு என்று பீகார் தேர்தலுக்காக ஊரெல்லாம் பொய் பிரச்சாரம் செய்யும் பப்பு ராகுல் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
அரசியல் கட்சிகள் தங்கள் பூத் ஏஜென்ட்கள் மூலம் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றமும் அறிவித்துள்ளது.
ஆனால் இதுவரை இரண்டே இரண்டு ஆட்சேபனைகள் மட்டுமே தேர்தல் கமிஷனிடம் தரப்பட்டிருக்கின்றன.
இதிலிருந்து தெரிவதென்ன?
இந்திய மக்களாட்சியையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும் களங்கப் படுத்தவே பப்பு ராகுல் திட்டமிட்டு பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது வெட்டவெளிச்சம் ஆகிறது.!
சுந்தர்ஜி
SANGI IT WING
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









.jpg)

.jpg)


