பொறுப்பு டிஜிபி
பத்திரிக்கையாளர்கள் கிடுக்கிப்பிடி கேள்வி
ஒரு நபர் ஆணையம் விசாரிக்கும் என்று சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தார்.
ஒரு பக்கம் உளவுத்துறை டேவிட்சன் பேட்டி அளிக்கின்றார்.
பேட்டி முழுமையானதாக இல்லை.
அமுதா அம்மையார் வந்து பேசுகின்றார். இது போன்ற விசயங்களுக்கு வந்து பேசியதே இல்லை. அழுத்தங்கள் பலமாக உள்ளது என்று அர்த்தம்.
பத்து ரூபாய் புத்திசாலித்தனமாக பேசுவது போல பதில் அளிக்கின்றார்.
அரசாங்க சக்கரங்கள் ஒவ்வொன்றும் சுவிட்ச் போடாமல் தங்கள் உச்சபட்ச விசையுடன் ஓடிக் கொண்டேயிருக்கின்றது.
ஏனிந்த பதட்டம்.?
அனைத்து அச்சு ஊடகங்களும் Actor Vijay மேல் தான் தவறு என்று தீர்ப்பு எழுதி விட்டார்கள்.
அனைத்து காட்சி ஊடகங்களும் #TVKparty அரசியலில் இருந்து அப்புறப்படுத்தியே ஆக வேண்டும் பதட்டப்பட்டு பாரம் சுமக்கின்றார்கள்.
விவாத மேடைகள் வார்த்தைகளால் பட்டுத் தெறிக்கின்றன.
தராசு ஷ்யாம், கவர்னர் புகழ் லஷ்மி, இது போன்ற கூலிகள் அடுத்தடுத்த மேடைகளுக்கு அவசரமாக அரிதாரம் பூசிக்கொண்டு நாள் முழுக்க உழைக்கின்றார்கள்.
வீடியோ வரிசையாக வந்து கொண்டேயிருக்கிறது.
பொந்துக்குள் இருந்தவர்கள், கண்ட கண்ட சந்துக்குள் வாழ்ந்தவர்கள் அத்தனை பேர்களும் இப்போது சமூக ஆர்வலர்கள்.
திடீர் சாம்பார் போல திடீர் போஸ்டர்கள் பரபரப்பு ஊட்டுவதாக சொல்கின்றார்கள்.
யார் ஓட்டச் சொன்னார்கள் என்று பையனிடம் கேட்டால் அடுத்த நாளே அவன் சொர்கக வாசல் திறக்க சென்று விடுகின்றான். தூக்குப் போட்டுக் கொண்டான் என்கிறார்கள்.
கூட்டணி ஜந்துகள் ஊர்ந்து கொண்டேயிருக்கின்றது.
பேசி முடித்தவுடன் திமுக வின் இந்த இக்கட்டு சூழலை மனதில் வைத்துக் கொண்டு இந்த முறை கூடுதல் இடங்களில் போட்டியிடத் தயாராக உள்ளோம் என்று பேட்டியின் ஊடாக தெரிவிக்கின்றார்கள்.
வாடகைக்கு எடுக்கப்பட்ட திரை கலைஞர்களின் உரை உன்னதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
எந்த கூலியும் செயல்பட முடியவில்லை.
மத்திய பாஜக நான்கு புறமும் ஆணி அடித்து விட்டார்கள்.
முதலாளியின் மற்ற எந்த வேலையாட்களும் இதனை திசை திருப்ப முடியவில்லை.
காரணம் சமூக ஊடகங்கள்.
கங்குவா படம் வந்து முதல் ஒரு வாரமும் சமூக ஊடகங்கள் தனியாக நின்றது.
காட்சி ஊடகமும் அச்சு ஊடகமும் ஒரே அணியில் நின்று வாங்கிய காசுக்கு தாங்கிப்பிடித்துக் கொண்டே நின்றது.
ஆனால் கடைசியில் காட்சி ஊடகம் பின்வாங்கத் தொடங்க இறுதியில் சமூக ஊடகங்கள் மனிதர்களின் குரல்கள் உலகம் முழுக்க கொண்டு சேர்த்தது.
தான் என்ற அகம்பாவத்தில் அதுவரையிலும் அலைந்து கொண்டு இருந்த நடிகனின் ஈகோ வை சுக்கு நூறாக்கியது.
இன்று திரைக் கோமாளிகள் பயந்து பயந்து சாகின்றார்கள்.
சுகர் மாத்திரை போட்டு முட்டி வலி தைலம் தடவிக் கொண்டு இருக்கும் பழைய கோமாளி இன்று புதிய நடிகனைப் பார்த்து வெந்து சாகின்றார்கள்.
நமக்கும் தீர்ப்பு எழுதி விடுவார்களோ என்று.
யாருடனும் கூட்டணி இல்லை என்று இன்னமும் வயதுக்கு வராமல் வாய் வழியே வசூலித்துப் பழகியவர்கள்
ஒரு நாளைக்கு 20 வீடியோ போடுகின்றார்கள். எவரும் திரும்பிக்கூட பார்க்கவில்லை.
இட்லிக்கடை காற்று வாங்கிக் கொண்டு இருப்பதாக தகவல் வந்து கொண்டேயிருப்பதற்கு பின்னால் இருப்பது சமூக ஊடகங்களின் மூலம் கொண்டு செல்லப்படும் பிரச்சாரங்கள் மட்டுமே.
திமுக தடுமாறும் தருணத்தின் தொடக்கமிது.
அமித்ஷா தமிழக தேர்தல் பயணத்தின் முதல் அடியும் கூட.
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக