உயர் திரு நீதிபதி செந்தில்குமார் அவர்களுக்கு !!
சமூக நீதி மற்றும் கருத்துரிமை பேச்சுரிமை நிறைந்த ஜனநாயகத்தில்....
நீதிமன்றத்தை மட்டுமல்ல,
யாரையும் ஆதாரமில்லாமல் அவதூறாக பேசக்கூடாது என்பது மட்டுமே சட்ட விதி !!!!
..... நீங்கள் அளித்த தீர்ப்புக்கு முந்தைய கருத்து மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்..
..... விசாரணைகள் எதுவும் இன்றி வீடியோவை பார்த்து அளித்த கருத்தாகவே இதனை பார்க்கப்படுகிறது..
மத்திய அரசு அனுப்பிய உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கைகளைப் பார்க்காமல்..
தமிழக அரசு அமைத்த ஒரு நீதிபதி ஆணையத்தின் அறிக்கையை பார்க்காமல்..
.
மிக மிக அவசரமாக ஒருதலைப் பட்சமாக கொடுக்கப்பட்ட தீர்ப்பாகவே மக்கள் விமர்சிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்....
ஆளும் கட்சி அரசியல்வாதிகள் உங்கள் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டது விமர்சிக்கப்படுகிறது...
நீங்கள் யாரைக் கண்டித்து முந்தைய கருத்து சொன்னீர்களோ!
அவர்கள் உங்கள் குடும்பத் திருமணத்திற்கு வரவில்லை,
யாருக்கு ஆதரவாக கருத்து சொன்னீர்களோ அவர்கள் உங்கள் குடும்ப திருமணத்திற்கு வந்தார்கள் என்பதால்...
சோசியல் மீடியா முழுவதும் உங்களுடைய படம் நிறைந்து காணப்படுகிறது...
நீதிமன்றத்தில் அவர் கடவுளே என்றாலும் ...
இருதரப்புக்கும் ஒட்டு உறவில்லாதவர்கள் தானே தீர்ப்பு அல்லது கருத்து சொல்ல வேண்டும் ?
இந்தத் தீர்ப்பை சிபிஐ க்கு மாற்றி அதற்கு ஒரு கால அவகாசம் கொடுத்துவிட்டு கருத்துசொல்லி இருக்கலாம் அல்லவா ?
சாமானியர்களின் வழக்குகளை வருட கணக்கில் இழுத்தடிக்கிறீர்கள் !!!
இதுபோன்ற அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் உடனடியாக தீர்ப்பும், கருத்தும் சொல்கிறீர்கள்.. !!!
என்பது மக்களின் மிகப்பெரிய வேதனை!!
இங்கே உயர்ந்தவர் தாழ்ந்தவர் சாமானியன் அதிகாரம் படைத்தவர்கள் என்ற பாகுபாடு பார்க்கிறீர்கள் என்று மக்கள் அய்யப்படுகிறார்கள்.
நீதிபதி ஐயா அவர்களே!!!
இது இளம் சமுதாயத்திற்கான காலம்..
இங்கே யாரையும் கட்டுப்படுத்த முடியாது..!!
கட்டுப்படுத்தினால் மற்ற நாடுகளின் நிகழ்வுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்பதை நீதிமன்றங்கள் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும்!!!
இளம் கன்று பயம் அறியாது . என்பது ஒரு உலக பிரச்சனை!!!
வயதில் மூத்தவர்கள் மிகவும் அலசி ஆராய்ந்து பாதுகாப்பான கருத்தை சொல்ல வேண்டும் !!!!
41 பேர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சம்பவம் நடந்த மறுகணமே
உடனடியாக களத்திற்கு சென்று களநிலவரங்களை முழுமையாக அறிந்து அதன் பிறகு கருத்து சொல்லி இருந்தால் அந்த தீர்ப்பு நியாயமாகவும் தர்மமாகவும் பார்க்கப்படும் !!!
உங்களுக்கு பாராட்டுக்களும் மக்கள் ஆசிகளும் கிடைத்திருக்கும்.....
ஏனென்றால் கரூரில் கூடிய மொத்த கூட்டமும் எமோஷனல் கிரவுட் !!!
அல்லது ...
டாஸ்மாக் வழக்கில் நீங்கள் விலகிக் கொண்டது போல், ....
இந்த வழக்கிலும் விலகி இருந்தால் இது போன்று சர்ச்சைகள் ஏற்பட்டு இருக்காது....!!
கரூர் சம்பவத்தில் !!!
விஜய் தாமதமாக சென்றது குற்றம் என்றால் ?
விஜய் வரும் பொழுது மக்களுக்கு இட வசதி அடிப்படை குடிநீர் மற்றும் டாய்லெட் வசதி செய்யாதது தமிழக அரசின் மிகப்பெரிய குற்றம் தானே?
குறைந்தபட்சம் அந்த மனுவில் குறிப்பிட்டது போன்று பத்தாயிரம் பேருக்காவது பொது இடங்களில் குடிநீர் வசதியும் கழிப்பிட வசதியும் இருக்க வேண்டும் அல்லவா?
விஜய் தாமதமாக வருவதை மக்களுக்கு அறிவிக்காத விஷயம் கூட அரசு மிகப் பெரிய குற்றம் தானே !!
இந்த டிஜிட்டல் காலத்தில்,
விஜய் லைவ் லொகேஷன் என்பது நொடிக்கு நொடி துல்லியமாக கூகுள் மேப் அப்டேட் செய்கிறது... அதை மக்களிடம் தெரிவித்திருக்கலாமே !!
கரூர் மக்கள் என்பவர்கள் ,மக்கள் தானே
அவர்கள் ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு தானே ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்!!!
அவர்களுக்கு தண்ணீர் வசதி இருப்பிட வசதி , கழிப்பிட வசதி அனைத்தும் அளித்திருக்க வேண்டும் தானே ?
...... இதை செய்யாத அரசு நிர்வாகத்தையும் நிர்வாக ஊழியர்களையும் நீதிமன்றம் தண்டிக்காமல் காப்பாற்றி விட்டதை மக்கள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள் ?
மக்கள் மட்டுமல்ல சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை பேசுகிறார்கள் ..
ஊட்டு வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியுமா ? நீதி தேவரே?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக