சனி, 8 நவம்பர், 2025


இந்தியாவுடன்
கடந்த 1947-ஆம் ஆண்டு பிரிந்து சென்றிருக்காவிட்டால்,
இன்று ஒரு வல்லரசுடன் இணைந்து சிறந்த பொருளாதார வாழ்க்கையை வாழ்ந்திருப்போம் என்று
பாகிஸ்தான் இளைஞர்கள் பலர் பகிரங்கமாகத் தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர்.
பொருளாதார ரீதியாகவும், வளர்ச்சியின் அளவீடுகளிலும் இந்தியாவுடன் பாகிஸ்தானை ஒப்பிடுகையில்,
நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக பாகிஸ்தானின் இளம் தலைமுறையினர் கருதுகின்றனர்.
உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகள் வெளியிடும் தரவுகளும் இந்த வேறுபாட்டை உறுதிப்படுத்துகின்றன:
உலக வங்கி அறிக்கையின்படி, 2014 முதல் 2024 வரையிலான பாஜகவின் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சிகளில் இந்தியாவில் 269 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இது பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம்.
ஆனால், பாகிஸ்தானில் இதே காலகட்டத்தில் கடும் வறுமை நிலை 4.9% இலிருந்து 16.5% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் தற்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது.
ஆனால், பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவின் அளவில் பத்தில் ஒரு பங்காகவே உள்ளது.
1960-களில் பாகிஸ்தானின் தனிநபர் GDP இந்தியாவின் தனிநபர் GDP-யை விட அதிகமாக இருந்தது.
ஆனால், இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாகிவிட்டது. சராசரியாக ஒரு இந்தியர் ஒரு பாகிஸ்தானியரை விட 70% அதிகமாக சம்பாதிக்கிறார்.
பாகிஸ்தானில் உள்ள 240 மில்லியன் மக்களில் 64% பேர் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர்.
ஆனால், இவர்களில் சுமார் 31% இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை போன்ற அமைப்பு ரீதியான புறக்கணிப்புகளால் இந்த புதிய தலைமுறை ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மோடியின் ஆட்சியின் அசுர வளர்ச்சியை கண்டு,
பாகிஸ்தானில் உள்ள படித்த இளைஞர்கள், “நாம் மட்டும் இந்தியாவில் இருந்து பிரியாமல் இருந்திருந்தால்,
இன்று ஒரு வல்லரசுடன் இருந்திருப்போம், நம்முடைய எதிர்காலம் சிறப்பாக இருந்திருக்கும்” என்று வெளிப்படையாக பேசுகின்றனர்.
வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் பாகிஸ்தான் தொடர்ந்து நிதி உதவிகளை நாடும் நிலையை, “நாங்கள் பிச்சை எடுக்கிறோம்” என்ற வார்த்தைகளால் அவர்கள் தங்கள் விரக்தியை பதிவு செய்கின்றனர்.
சுந்தர்ஜி
சங்கி
‎, ’‎BREAKING NEWS ا ኢት பாகிஸ்தான் ராணுவம் விற்பனைக்கு? காசா அமைதி திட்டத்துக்கு உதவ தனது வீரர்களை கசாவிற்கு அனுப்ப ஒரு வீரருக்கு 10000 டாலர்கள் பாகிஸ்தான் இஸ்ரேலிடம் கேட்டதாகவும், அதற்கு இஸ்ரேல் 100 டாலர் தர ஒப்புக்கொண்டதாகவும் பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார். ISWARYA MOHAN You f‎’ எனச்சொல்லும் வாசகம்‎ படமாக இருக்கக்கூடும்
புள்ளிவிவரங்களைக் காண்க
விளம்பரம் உருவாக்குக
விருப்பம்
கருத்திடுக
பகிர்க

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக