இந்த அப்பீஸ்மெண்ட் பாலிடிக்ஸ் நோயை மிகச் சுலபமாக குணமாக்க அற்புதமான மருந்து உள்ளது.
அந்த மருந்து ஏற்கனவே நல்ல குணமளித்துள்ளது.
பிரிவினை பேசிக் கொண்டிருந்தது திமுக. பிரிவினை பேசும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை செய்யப் படும் என்றார் நேரு.
அவர் சொன்ன சூடு ஆறும் முன் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார் அண்ணாதுரை..
சட்ட நகலை எரித்தார் கருணாநிதி. சட்ட நகலை எரித்தால் பதவி பறிக்கப்படும் என்றது மத்திய அரசு.
உடனே நான் எரித்தது சட்ட நகல் இல்லை வெறும் பேப்பர் தான் என்று வெற்றிகரமாக ஜகா வாங்கினார் கருணாநிதி.
முன் ஏர் செல்லும் வழி பின் ஏர் செல்லும் என்பார்கள்
அதேபோல்
நீட் தேர்வு , ஜிஎஸ்டி , ஆதார் போன்று காங்கிரஸ் கொண்டு வந்த பல திட்டங்களை அப்படியே நடைமுறைப் படுத்திய மோடியரசு
மேலே சொன்ன நிகழ்வுகளில் காங்கிரஸ் அரசு செய்ததுபோல்
" தீவிரவாதிகளுக்கு எந்தவிதத்தில் ஆதரவு தெரிவித்தாலும் அந்தக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் தகுதி இழக்கும்.
அங்கீகாரம் ரத்தாகும் " என ஒரே ஒரு சட்டம் கொண்டு வந்தால்/ அல்லது அரசாணை வெளியிட்டால் போதும் .
அப்புறம் பாருங்கள் இவர்கள் அடிக்கும் அந்தர் பல்டியை. கழைக் கூத்தாடி தோற்றுப் போவான்
பாஜக மோடியரசு இப்படி ஓர் சட்டம் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்புடன் .
.
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக