இந்திய எல்லையில் மீண்டும் ஒரு மாணவர் போராட்டம் வெடித்துள்ளது அந்த இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
பொதுவாக மிக தொன்மையான பூமி ஒரே பூமி இரண்டாக பிரிக்கபடும் பொழுது அதிகார மையம் மாறியிருந்தாலும் அவைகளுக்கு இடையே ஒரு பூர்வீக தொடர்பும் சில சிந்தனைகளும் ஒப்பீடும் எப்போதும் இருக்கும்,
அந்த இடத்தில் ஒரு பக்கத்தை வளரவிட்டால் பல விஷயக்களில் உயர்த்திவிட்டால் தாழ கிடக்கும் இன்னொரு பக்கமானது தடைகளை உடைத்து விட்டு வந்து சேர்ந்துவிடும்
என்னதான் வேலியிட்டு அடைத்தாலும் தங்களை அடுத்திருக்கும் தங்கள் பூர்வீகம் பெருவாழ்வு வாழ்கின்றது என்றால் நிச்சயம் அவை வேலையினை உடைத்து இணைந்துவிடும்
பெரிய உதாரணம் ஜெர்மனி, அது இரண்டாக பிரிக்கபட்டு அமெரிக்கா மற்றும் சோவியத் கட்டுபாட்டில் வந்தது
அமெரிக்க தரப்பின் மேற்கு ஜெர்மனி வேகமாக வளர சோவியத்தின் கிழக்கு ஜெர்மனி கம்யூனிச தாக்கத்தால் நாசமாய் போக ஒரு கட்டத்தில் பெர்லின் சுவரை இடித்து ஜெர்மானியர்கள் ஒன்றானார்கள் கிழக்கு ஜெர்மனி மேற்கோடு இணைந்தது
இதே காட்சிதான் கொரியாவிலும் உண்டு நாளை வடகொரிய கலைஞர் குடும்பமான கிம் குடும்பத்திடம் இருந்து அதிகாரம் அகன்றால் கொரியாவும் இணையும்
இப்போது இதே காட்சி காஷ்மீரிலும் தெரிகின்றது
இந்திய கட்டுப்பாடு காஷ்மீரில் மக்களுக்கு சலுகைகள் அதிகம் , கல்வி முதல் எல்லாமும் மானியம், மலைபகுதியான அங்கு விளையாவிட்டாலும் கங்கை நதிக்கதை கோதுமை மிக மிக விலை குறைவு , மின்சாரம் மானியம் தொழில்துடங்க கடன் என மக்களுக்கு சலுகைகள் அதிகம் இந்திய அரசு அதை செய்கின்றது
மறுபக்கம் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் விஷயம் தலைகீழ், சுமமவே தள்ளாடும் பாகிஸ்தானில் இவர்களுக்கு எதுவுமில்லை பாகிஸ்தானில் இவர்கள் இரண்டாம்தர குடிமக்கள்
இதனால் அம்மக்கள் தாங்கள் இந்தியாவுடன் இணையவும் பாகிஸ்தான் கட்டுபாட்டில் இருந்து வெளியேறவும் அடிக்கடி போராடுகின்றார்கள் இம்முறை மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றார்கள்
நிலமை பெரிதாக சென்று கொண்டிருக்கின்றது, மாணவ புரட்சி இலங்கை, வங்கதேசம் நேபாளம் தொடங்கி ஆக்கிரமிப்பு காஷ்மீரை தொட்டு நிற்கின்றது
இங்கு கவனிக்கபட வேண்டிய விஷயம் இந்த ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆப்கானிஸ்தான் எல்லையினை ஒட்டியது, ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கின்றது,
தாலிபன் எனும் வார்த்தைக்கு என்ன பொருள் என்றால் அதேதான் "மாணவர்கள்"
ஆக இதற்குமேல் நீங்களே ஊகித்து கொள்ளலாம், விரைவில் நல்ல செய்தி கிடைக்க எதிர்பார்ப்போம்
சுந்தர்ஜி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக