அவர்களுக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.
SIR-க்கு எதிராக தலைகீழாக நின்று தண்ணிர் குடித்தாலும் இவர்கள் நினைப்பது நடக்காது.
உச்ச நீதிமன்றமே இதில் தலையிட முடியாது என்று சொல்லிய பின்னரும், இவர்கள் ஏன் இப்படி பேசுகின்றனர் என்றால், விவரம் தெரியாத முட்டாள் கட்சிகார தற்குறி ஆதரவாளர்களை உசுப்பேத்தி விடுவது மட்டுமே குறி.
முதலில் SIR என்பது ஒவ்வொரு 10 வருடமும் கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்று. இதுவரை ஒரு ஃபார்மாலிட்டியாக கண்துடைப்புக்கு நடத்தி வந்தனர்
இதுவரை ஆண்ட கட்சிகள். இப்போது அதிலேயே சிக்கி உள்ளனர் வசமாக. பெரும்பாலான மாநிலங்களில் கடைசியாக நடந்த SIR 2002-03 கால கட்டத்தில்.
1) இப்போது புதிதாக SIR நடத்த, சட்டப்படி, அதுவே ஆதார வாக்காளர் லிஸ்ட். இதனை யாரும் எதிர்க்கவே முடியாது. நீதிமன்றம் உட்பட.
2) இதனையொட்டி, அந்த மாநில பிறப்பு இறப்பு விகிதம், புதிதாக குடிவந்தோர் ஆகியோரை முதலில் எளிதாக பிரித்துவிடலாம்.
3) சந்தேகம் வந்தால், இவர்கள் அனைவரும் கட்டாயமாக தங்கள் வாக்களிக்கும் உரிமையை பெற, ஆதாரங்களை சமர்பித்தாக வேண்டும்.
உதாரணமாக பிறப்பு சான்றிதழ், வேறு மாநிலம் அல்லது தொகுதியில் இருந்து வந்தால், முகவர் மாற்றம் எனில், அங்கே விண்ணபித்து மாற்றல் பெற்றார்களா இல்லையா போன்றவற்றை நிரூபித்து ஆகவேண்டும்.
4) வாக்காளர் லிஸ்டில் உள்ளதா என உறுதி செய்யும் கடமை வாக்காளருக்கே, அவர்களுக்கு கட்சியினர் உதவி செய்யலாம் அல்லது நேரடியாகவே விண்ணப்பிக்கலாம்.
வீடு வீடாக அரசு அலுவலர்கள், BLAக்கள் வரும்போதும் உரிமை கோரலாம்.
5) Section 14(b)படி 18 வயதை கடந்த ஒவ்வொரு வரும், ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் முதல் தேதியில் விண்ணப்பிக்கலாம்.
மற்ற அனைத்தும் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும்.
ஆனால் இதற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட 5-6 வருடமாக நடந்து வந்தது என்பது உங்களுக்கு தெரியாதிருக்க வாய்ப்பு உண்டு.
ஒரே நாடு ஒரே தேர்தல் எனும்போதே இதற்கான பணிகள் துவங்கி விட்டன. டீலிமிடைசேஷனும் இனி சுலபமாக நடக்கும்.
சரி எதிர்கட்சிகள் பிரச்சினை செய்ய வாய்ப்புள்ளதே?
இல்லை, ஒரு வேளை நீதிமன்றத்தை நாடினால், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தயாராக உள்ளது.
ஒரு வேளை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடத்த விடாமல் செய்தால் என்னாகும்.
Article 324படி தேர்தலை நடத்த அல்லது தள்ளி வைக்க, தேர்தல் கமிஷனுக்கு சில உரிமைகளை சட்டம் கொடுத்துள்ளது, அதில் நீதிமன்றமும் தலையிட முடியாது.
5 வருடம் முடிவதற்குள் தேர்தல் நடத்த வேண்டும்,
ஒரு வேளை எதிர்பாராத இயற்கை பேரிடர்கள், போர் போன்ற காரணங்களால் அதிகபட்சம் 6 மாதம் தள்ளி வைக்க முடியும்.
இன்னொரு 6 மாதம் பாராளுமன்ற வாக்கெடுப்பு மற்றும் குடியரசு தலைவர் ஆணை மூலம் தள்ளி வைக்க முடியும்.
இன்னொரு விதி இதுவரை யாரும் அறியாதது, ஒரு மாநிலத்தின் வாக்காளர் லிஸ்ட் தயாராக இல்லை (SIR அறிவித்த பின்னர்) எனில், தேர்தலை தள்ளி வைக்க முடியும்.
அதற்குள் 5 வருடம் முடியும் பட்சத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைத்து, வாக்காளர் லிஸ்ட் தயாரிப்பதில் ஈடுபடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.=
இப்போது கூட்டி கழித்து கணக்கு போட்டு பாருங்கள். மே வங்கம், தமிழகம் போன்ற எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் சில ஏதாவது பிரச்சினை செய்து SIR-ஐ நடக்க விடாமல் செய்ய முயன்றால் தேர்தல் தள்ளிப் போகும்.
குடியரசு தலைவர் ஆட்சி வந்து விட்டால் இந்த கட்சிகளின் கொஞ்ச நஞ்ச அதிகாரமும் இல்லாமல் போய்விடும்.
SIR முடியும் வரை தேர்தல் இல்லை என்பதே இறுதி சட்டம். எனவே இந்த கட்சிகள் பொத்திக் கொண்டு ஆதரவளிக்க வேண்டிய நிலை.
பொய்யான வாக்காளரை (வெளிநாட்டு, மாநில வாக்காளர்கள் அல்லது ஒருவரே 2-3 இடத்தில் வாக்களிப்பது ) என செய்ய முயன்றால், வாக்காளர் லிஸ்ட் தயாரிப்பதில் தாமதமாகும்.
ஏற்கனவே பீகாரில் கற்ற பாடங்களுடன் தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.
அந்தந்த பகுதிகளில் வரும் சின்ன சின்ன தடங்கல் எதுவுமே இதனை தாமதப் படுத்த முடியாது.
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக