நாம் ஏற்கனவே குடியரசுத் தலைவர் கேட்ட 14 கேள்விகளுக்கான வழக்கு பற்றிய விவாதங்களை அவ்வப்போது சுருக்கமாகத் தெரிவிக்கிறோம்.
அவ்வகையில் இன்று மகாராஷ்ட்ராவிற்காக களம் இறங்கினார் இந்தியாவின் அதி புத்திசாலி வக்கீல் ஹரிஷ் சால்வே.
இன்று அவரிடம் நீதிபதிகள் அதிக அளவுக்குக் கேள்விகள் கேட்கவில்லை.
காரணம் மனுஷன் இன்று ஒவ்வொரு சட்டப்பிரிவையும் அடுக்கி கோர்ட்டுக்கே வழிகாட்டியாக இருந்தார்.
அவருடைய பேச்சைக் கேட்டால் பெரிய ஏழரையை தமிழக கவர்னர் வழக்கில் இழுத்துட்டோம் போலன்னு உச்ச நீதிமன்றம் நினைக்க வாய்ப்புள்ளது. அந்தளவுக்கு அவரது வாதங்கள் அமைந்தன.
அவர் முன் வைத்த கருத்துகளின் சுருக்கம்.
1. ஒரு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, (கவர்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டால்) குடியரசுத் தலைவர் ஒப்புதல் இல்லாமல் மசோதா சட்டமாகாது.
அந்தளவுக்கு அதிகாரம் மத்திய அரசுக்குத் தான் உள்ளது. அதை மாற்றி சுதந்திரமான பெடரல் வேண்டுமானால் அரசியல் சட்டப் பிரிவு 201ஐ மாற்றம் செய்ய வேண்டும்.
ஆர்ட்டக்கிள் 201 குடியரசுத் தலைவருக்கு கால வரையறை செய்துள்ளதா?
அப்படி எல்லாம் , இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்கள் செய்யவில்லை. எனவே பெடரல் நேஷன் என்பது மத்திய அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டது தான்.
(Framers have created a system where Union can refuse a Bill passed by assembly what is uncharitably characterised as veto. It exists, unless we rewrite Article 201, he says. ) !!!
2. கவர்னருக்கு எல்லாம் டைம் லிமிட் செட் செய்யப்படவில்லை.
மேலும் அவர் ஏன் பில்லை மூன்று மாதத்திற்குள் அனுமதிகவோ, நிராகரிக்கவோ, குடியரசுத் தலைவருக்கு அனுப்பவோ இல்லை என்ற கேள்வியை இந்த கோர்ட் கேட்க முடியாது.
அதற்கு ஆர்டிக்கிள் 361 (The President, or the Governor or Rajpramukh of a State, shall not be answerable to any court for the exercise and performance of the powers and duties of hi s office or for any act done or purporting to be done by hi m in the exercise and performance of those powers and duties) ஐ மேற்கோள் காட்டி,
என்னுடைய வேலையைச் செய்யும் போது , அதற்கு நீ ஏன் இன்னும் செஞ்சு முடிக்கவில்லை என்ற கேள்வியை கவர்னரை நோக்கிக் கேட்கும் அதிகாரம் எந்த நீதிமன்றத்திற்கும் கிடையாது என்று விளாசினார்.
அதற்குக் குறுக்கிட்ட நீதிபதிகள், அப்ப கவர்னர் எவ்வளவு கால தாமதம் செய்தாலும் , மாநிலங்கள் எங்களை அணுகினால் நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா என்று கேட்டனர்.
3. இதற்கு ஹரிஷ் சால்வே கொடுத்த பதில் தான் அட்டகாசமானது.
ஆமாம்! மாநில அரசோ/ மத்திய அரசோ கொண்டு வந்த சட்டத்தில் பிழை இருந்தால் , எவர் வேண்டுமானாலும் கோர்ட்டை அணுகலாம்.
அப்போது கவர்னரிடம்/ குடியரசுத் தலைவரிடம் பில் சம்பந்தமான ஒப்புதல் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்று கவர்னரிடம் விளக்கம் கேட்கலாம்.
ஆனால் நீ ஏன் இந்த வேலையை இப்ப செய்யலன்னு கேட்கும் அதிகாரம் கோர்ட்டுக்குக் கிடையாது . அதுதான் கவர்னருக்கு உள்ள Discretionary Power என்றார்.
4. ஆர்டிக்கிள் 200 கவர்னருக்கு டைம் லைன் செட் செய்யாத போது கோர்ட்டுக்கு டைம் லைன் செட் செய்ய எந்த உரிமையும் கிடையாது என்றார்.
(Mr. Salve says Article 200 does not give any preconditions for the Governor to give assent, withhold or reserve Bills. Then, how is it possible to make a judicial decision on his bonafide?)
5. கவர்னரும்/குடியரசுத் தலைவரும் ஒப்புதல் கொடுக்காமல், கோர்ட்டே ஒரு பில்லுக்கு ஒப்புதல் கொடுக்க முடியும் என்பது இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கே முரணானது.
கவர்னர், குடியரசுத் தலைவர் இருவருமே உங்களைப் போன்ற உயர் பதவியை வகிப்பவர்கள்.
இந்த நாட்டில் இவர்கள் ஒப்புதல் இல்லாமல் கோர்ட்டே பில்லுக்கு ஒப்புதல் கொடுத்தால் எதற்கு ஒவ்வொரு சட்டப்பிரிவும் தேவை என்று இன்று கேள்வி மேல் கேள்வி கேட்டு தனது உரையை முடித்தார் ஹரிஷ் சால்வே.
இன்று நீதிபதிகள் ஹரிஷ் சால்வேவின் வாதத் திறமை முன்பாக அதிக அளவுக்குக் கேள்விகளே எழுப்பவில்லை.
ஒரு கேள்வி கேட்டால், இரண்டு விளக்கங்களைக் கொடுத்து விட்டு மனுஷன் ரெண்டு கேள்விகள் கேட்கிறார்.
நீதிபதிகள் Continue ன்னு சொல்லிவிட்டு அமைதியாகி விடுகிறார்கள்.
மத்தியப் பிரதேச அரசுக்கு ஆஜரான வக்கீலும், நீங்க பில்லுக்கு ஒப்புதல் கொடுத்தால் கவர்னரும், குடியரசுத் தலைவரும் எதற்குன்னு ஒரு கேள்வியைக் கேட்டு வச்சிருக்கார்.
நாம் மீண்டும் சொல்கிறோம், திரும்பவும் சொல்வோம்.
இந்த வழக்கு மிக முக்கியமான வழக்கு. இதில் அதிக அளவுக்கு மத்திய அரசே வெல்ல வாய்ப்புள்ளது.
ஆனாலும் யாரும் தங்களுக்கான அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். வழக்கு சூடு பிடித்துள்ளது.
இதுபோன்ற முக்கியமான விவாதங்கள் வரும் போது மீண்டும்எழுதுகிறேன்.
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக