பாரதத்தின் பார் புகழும் ராஜதந்திர சிந்தனைவாதி 'அஜித் தோவல்' அவர்கள், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், டொனால்ட் டக்கின் ஆட்டத்துக்கு ஆப்பு வைக்க ஆலோசனை.
டொனால்ட் டக் இறங்கி வந்தால் அமெரிக்காவுக்கு நல்லது.
45 பில்லியன் டாலர்கள் இந்தியாவுக்கு வர்த்தக உபரி அமெரிக்காவுடன் கிடைத்து வருவது இந்தியாவுக்கு ஆதாயம். ஆனால் அதை அமெரிக்கா கெடுக்க நினைத்தால், இங்குள்ள KFC, Coco cola, Pepsi, Amazon, Flipkart, Facebook, Watsapp, Google எல்லாவற்றுக்கும் இந்தியா செக் வைக்கலாம். போயிங் நிறுவனத்திற்கான 80 பில்லியன் டாலர் காண்டிராக்ட் ரத்தாகி, பிரான்ஸின் ஏர்பஸ்ஸிற்கு போய்விடலாம். அமெரிக்க பொதுமக்களுக்கு கிடைத்து வரும் விலை குறைந்த 'ஜெனரிக்' மருந்து பொருட்கள் தடை படலாம். அமெரிக்க சிப் டிசைனிங்கில் ஈடுபட்டு வரும் பல இந்திய நிறுவனங்களுக்கு நாம் தடை போடலாம்.
ரஷ்யாவிடமிருந்து நாம் வாங்கும் கச்சா எண்ணை இனி மேலும் அதிகரிக்கலாம்.
இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
இவை எல்லாவற்றையும் விட, டாலருக்கு மாற்றான 'பிரிக்ஸ் கரன்ஸியில்' இனி இந்தியாவும் முழு மூச்சுடன் ஈடுபடும். டாலருக்கு ஆப்பு வைத்தாலே அமெரிக்காவின் அனைத்து ஆட்டமும் அடங்கி விடும்.
145 கோடி மக்கள் வாழும் ஒரு தேசத்தை பகைத்துக் கொள்ள ஒரு அடி முட்டாள் கூட துணியமாட்டான்.
சுந்தர்ஜி
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக