பிராமின் எதிர்ப்பு எதனால் இங்கு....
"வெள்ளக்காரன் அடிமைகள் பிராமண எதிர்ப்பு செய்ய ஆரம்பித்தது ஏன்?" -
>>> "இங்கிலாந்தில் ரகசிய மரணதண்டனை விதிக்கப்பட்டு, தப்பி வந்த வ.வே.சு.ஐயர் ஒரு பிராமணர்."

சிப்பாய்க் கலகத்தின் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பித்தது மங்கள் பாண்டே என்ற பிராமணர்.

வாரன் ஹேஸ்டிங்ஸ் என்ற வெள்ளையனின் பாலியல் வன்முறைகள் மற்றும் ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததற்காக பிரிட்டிஷாரால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முதல் இந்தியர் நந்தகுமார் ஒரு பிராமணர்.

பகத்சிங்குடன் தூக்கு மேடையேறிய தேசபக்தர் சிவராம் ராஜகுரு, வெள்ளைக்காரன் கையால் சாகமாட்டேன் என்று தன்னைத்தானே சுட்டுக்கொன்ற சந்திரசேகர ஆசாத் இருவரும் பிராமணர்கள்.

இந்திய சுதந்திரத்துக்காக 18 வயதில் தூக்குமேடை ஏறிய மிக இளைய தேசபக்தன் குதிராம் போஸ் ஒரு பிராமணர்.

பணக்காரக் குடும்பத்தில் பிறந்தும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தன் நான்கு குழந்தைகளையும், தன்னையும் தேசத்துக்காகத் தியாகம் செய்த பத்மாசனி ஒரு பிராமணப்பெண்.

காந்தி, நேரு, அம்பேத்கர் என பல இந்தியப் பிரபலங்கள் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றபோது, அந்த பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்கு முன்பு கட்டாயமாக ஏற்க வேண்டிய, "இங்கிலாந்து ராணிக்கு விசுவாசமாக இருப்பேன்" என்ற உறுதிமொழியை ஏற்க மறுத்து, பாரிஸ்டர் பட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு வந்ததற்காக இங்கிலாந்தில் ரகசிய மரணதண்டனை விதிக்கப்பட்டு, தப்பி வந்த வ.வே.சு.ஐயர் ஒரு பிராமணர்.

20,000 இளைஞர்களைத் திரட்டி, வெள்ளையனுக்கு எதிராக பாரதமாதா சங்கத்தை நிறுவி தீவிர சுதந்திரப் போராட்டம் நடத்திய நீலகண்டப் பிரம்மச்சாரி ஒரு பிராமணர்.

வெள்ளைக்காரனின் தலைமையகமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், 140 அடி உயர கொடிக் கம்பத்தில் ஏறி பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக் கொடியை அகற்றிவிட்டு, இந்திய தேசியக் கொடியை முதன் முதலில் ஏற்றி வைத்த மாவீரன் ஆர்யா பாஷ்யம் ஒரு பிராமணர்.

பிரிட்டிஷாருக்குப் போட்டியாக கப்பல் ஓட்டிய வ.உ.சியை செக்கிழுக்க வைத்து, அதை எதிர்த்து போராடியவர்களை சுட்டுக்கொன்று, வ.உ.சியின் கப்பலை ஏலம் விட்டு, அதைத் தானே ஏலம் எடுத்து கொக்கரித்த கொடுங்கோலன் ஆஷ் துரையைப் பரலோகம் அனுப்பிய வீர வாஞ்சிநாதன் ஒரு பிராமணர்.

தன் உயிர் உள்ளவரை சுதந்திரத்திற்காகப் போராடிய முண்டாசுக்கவிஞன் சுப்பிரமணிய பாரதி ஒரு பிராமணர்.

விநாயகர் பந்தல் மூலம் இந்துக்களை ஒருங்கிணைத்து, "சுயராஜ்ஜியம் எமது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம்" என கோஷமிட்டு, வலுவான சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கி வைத்ததால் பிரிட்டிஷாராலேயே "இந்திய சுதந்திரப் போராட்டத் தந்தை" என்று அழைக்கப்பட்ட பாலகங்காதர திலகர் ஒரு பிராமணர்.

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி பிரிட்டிஷாரை ஓடவைத்த நிஜ தேசத்தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு பிராமணர்....!

இப்படி பெரும்பாலானோர் பிராமணர்களாக இருக்கையில் வெள்ளைக்காரனின் காலடியை வருடிக்கொடுத்து, எங்களுக்கு சுதந்திரமே வேண்டாம் என்று சொன்ன ஈவெரா மற்றும் அவரது அடிப்பொடிகளுக்கு எப்படி பிராமணர்களைப் பிடிக்கும்...? சுந்தர்ஜி SANGI IT WING
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக