திங்கள், 11 ஆகஸ்ட், 2025

அமெரிக்காவில் தற்போது கடும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கதறத் தொடங்கி உள்ளனர்.


 அமெரிக்காவில் தற்போது கடும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கதறத் தொடங்கி உள்ளனர்.

வால்மார்ட்டில் தன்னுடைய இந்த வார மளிகை பட்ஜெட் 700 டாலர்கள் ஐந்து செண்ட்டாக
(சுமார் 61000 ரூபாய்கள்) எகிறி உள்ளது என்கிறார் ஒரு குடும்பத் தலைவி.
"முன்பெல்லாம் நான் 350 டாலருக்கு ஒரு வார
மளிகை கொள்முதலை முடித்து விடுவேன். இப்போது (ட்ரம்ப் பதவி ஏற்ற பிறகு) அது இரட்டிப்பாகி விட்டது. எங்களால் இதை சமாளிக்கவே முடியவில்லை. இத்தனைக்கும் நான் என் கணவர் இருவரும் சம்பாதிக்கிறோம். அனாவசியமாக எந்த பொருளையும் வாங்குவதில்லை. குறைந்த விலையில் உள்ள பொருட்களையே தேடித் தேடி வாங்குகிறேன். அரசியல்வாதிகளுக்கு ஏன் குடும்பத்தாரின் சவால்கள் புரியவில்லை" என கதறுகிறார் அவர்.
உதாரணத்திற்கு 9.99 டாலர்கள் இருந்த காஃபி, தற்போது பிரேசில் மீதான வரியால் 17.99 டாலர்கள் என விற்கிறது. இறைச்சிகள், கடல் உணவுகள், ரொட்டி மற்றும் ஹேம் பர்கர்கள், கிட்னி பீன்ஸ் போன்ற பயறுகள், குக்கீஸ் பிஸ்கெட்டுகள், முட்டைகள், ஆடை ஆபரணங்கள் என ஒவ்வொன்றும் கடும் உயர்வாம்.
சொல்லப் போனால் விலை உயராத பொருளே இல்லையாம். இனி உணவுப் பொருள். வாங்கவே கடன் வாங்க வேண்டிய நிலைக்கு பல குடும்பங்கள் தள்ளப்படக்கூடும்.
மக்கள் ஒரு கட்டத்தில் உணவுப் பொருள் சூறையாடலில் ஈடுபட்டாலும் ஆச்சரியமில்லை.
Make America Great Again என்று இந்த கோமாளி, தங்களை எத்தனை முட்டாளாக்கி இருக்கிறார் என கதறுகின்றனர் பலரும்.
இந்தியாவில் வருடத்திற்கு 12 லட்சம் வருமான வரி விலக்கு கொடுத்து, அடிப்படை உணவுப் பொருட்களை ரேஷனில் இலவசமாயும், குறைந்த விலையிலும் கொடுத்து, மாதத்திற்கு காய்கறி-மளிகை சாமானுக்கு ஒரு குடும்பம் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஐயாயிரம் செலவு செய்தால் போதும் எனும் நிலையிலேயே, சிலர் உலகத்தலைவர் மோடி அவர்களை குறை கூறுவதுதான் கொடுமை.
இந்தியாவை விட ஒரு மனிதன் சுலபமாக, குறைந்த வருமானத்திலேயே, பாதுகாப்பாக, ஓரளவிற்கு
வாழ்க்கைத் தரத்துடன் வாழக் கூடிய நாடு உலகிலேயே வேறு
எதுவும் இல்லை என்பேன். சுந்தர்ஜி
SANGI IT WING
3 பேர் மற்றும் , ’65 26 க கருத்துகள்’ எனச்சொல்லும் வாசகம் படமாக இருக்கக்கூடும்
எல்லா உணர்ச்சிகளும்:
21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக