எதுக்கெடுத்தாலும் கருத்து சொல்லுதேன்னு, பொசுக்குனு வந்து, அவன் வரி கட்ட மாட்டேன்னு காசு கேக்குறான், ஏ மோடி, இனிமே எங்க சம்பளத்தையும் காசா கொடுத்துடு, வங்கிகளை இழுத்து மூடுன்னு ஆரம்பிச்சிடறாங்க.
கொஞ்சம் பொறுமையா, என்ன நடந்துச்சின்னு தெரிச்சிட்டு சொல்லுங்கப்பான்னா, ஏ மோடி அடிமை, வடநாட்டு கூலின்னு பொங்குறாங்க. இந்தா வந்துருச்சி என்ன மேட்டர்னு, கெட்டிக்காரன் புளுகு, எட்டு நாளில் என்பது அந்தக் காலம், இப்பல்லாம் 8 மணி நேரம்தான்.
GST நோட்டீசு வந்துடுச்சு, 4 வருஷத்துல 1.5 கோடி டர்ன் ஓவர் பண்ணிட்ட, 29 லட்சம் வரியா கட்டுன்னு மோடி கேட்டாருன்னு எகிறுனானுங்க. அதுவும் காய்கறி விக்கிற கடைக்குன்னு சொன்னபோதே, மண்டைக்கு உள்ளாற மணி அடிச்சுது எனக்கு.
அட திராவிடனுங்க, காங்கிரஸ்காரனுங்களுக்கு வேற பொழைப்பு இல்ல, சரி, ஆனா சோ கால்ட், மிஸ்ட்கால் பாஜக ஆதரவாளர்களுக்கு கூடவா மண்டைக்குள்ள எதுவுமே இல்லை, உடனே, ஏ மோடின்னு ரைட்அப்பா எழுதி தள்ளிட்டாங்க.
விஷயம் இவ்வளவுதான்.
- GST யில CGST மத்திய அரசு SGST மாநில அரசு கீழ வருதுன்னு திபாஜக மிஸ்ட்கால்களுக்கு தெரியுமோ என்னவோ.
- கர்நாடக SGST Dept of commercial taxes, Govt of Karnataka, யாருடைய டர்ன் ஓவரெல்லாம் வருடத்துக்கு 40 லட்சத்தை தாண்டியதோ அவங்களுக்கு ஒரு அறிவுரை நோட்டீஸ் அனுப்பியது. பலர் கணக்கெல்லாம் நோட்டுபுத்தகத்துல வெச்சிகிட்டா போதும்னு இருக்கறவங்க. GSTயில பதிவு பண்ண தயாரில்லை.
- GST விதிப்படி 40 லட்சம் முதல் 1.5 கோடி வரை டர்ன் ஓவர் இருந்தா, காம்பன்சேஷன் திட்டம் மூலமா ஒரு 5% GSTயை வரியா கட்டிணா போதும் என்பது சட்டம்.
- அதுகூட வரி உள்ள பொருட்களை விற்றால் மட்டுமே. வரியற்ற பொருட்கள் (காய்கறி போன்றவை 0%) விற்றால் கணக்கு மட்டும் வைத்துக் கொண்டால் போதும், GST கட்டத் தேவையில்லை என்பது சட்டம்.
- இந்த MRP பிரிண்ட் செய்யப்பட்ட பொருட்கள், 2% முதல் 28% வரை உள்ள பொருட்களை விற்பவர்கள் மட்டுமே 5% கட்ட வேண்டும்.
- பலர் 40 லட்சத்தை தாண்டினாலும் GSTக்குள்ள வரத்தயாரில்லை. ஏழை, படிப்பறிவு குறைவு, சின்ன பிஸ்னஸ் என விதவிதமாக ரீல் விடுவார்கள். ஆனால் காசை கல்லாவில் போடமட்டும் இதெல்லாம் சொல்ல மாட்டார்கள்.
- GST வரி என்பது இவர்கள் பாக்கெட்டில் இருந்து கட்டுவதில்லை. வாடிக்கையாளர் அரசுக்கு கொடுப்பது, அதை கட்ட இத்தணை பில்ட்அப். இரண்டாவதாக 12 லட்சத்துக்கு மேல் வருமானம் அல்லது லாபம் எனில் வருமான வரி கட்ட வேண்டுமே, அதற்கும் மனமில்லை.
- இவர்களுக்கு வரித்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு நோட்டீஸ் அனுப்புவது வழக்கம். அது அரசின் வேலையும் கூட. அதை செய்ததற்கு தான் இத்தணை அமளிதுமளி.
- எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதீங்க, கொஞ்சம் வரியும் கட்டுங்க, நீங்க தொழில் செய்வது உங்கள் திறமை மட்டுமல்ல, பின்புலத்தில் அரசு அதற்கான கட்டமைப்பை சூழ்நிலையை தொடர்ந்து உருவாக்க, வரிகள் அவசியம். அதை புரிந்து கொள்ளுங்கள்.
என்னுடைய வருத்தம் என்னவெனில், படித்த நல்ல பதவியில், பணியில் உள்ளவர்கள் இதை புரிந்து கொண்டு, டிஜிடல் பேமண்ட் வாங்கலைன்னா, உன் கடையில் வாங்க மாட்டேன் என்று எதிர் குரல் எழுப்பி இருக்க வேண்டும். ஆனால் அவன் கட்டலை நானும் கட்டமாட்டேன் என்று அவனுக்கு இணையாக போகிறார்களே என்பது தான்.
மொத்தத்துல யாருக்கும் வரி மட்டும் கட்டக்கூடாது, நாடு எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்பதுதான் மனப்பான்மை. ஒரு நியுஸ் வந்தா போதும், உடனே தையத்தக்கா என சோஷியல் மீடியாவுல குதிக்கிறது.
இதைத்தானே எதிர்கட்சிகள், டீப்ஸ்டேட், வியாபாரிகள், ஊழல்வாதிகள் எதிர்பார்க்கிறார்கள். எவனும் கோஞ்சம்கூட யோசிக்க கூடாது, மடையர்களா இருக்கணும் என்பதற்குதான், டூல்கிட்ட போட்டு, மீடியா மூலமா உசுப்பேத்தி விடறது.
ஆமாம் நான் மடையன்தான்னு இப்படி வெளிச்சம் போட்டு காட்டுறீங்கப்பு. இனியாவது மாறுங்க. மீடியாவோட போட்டி போட்டு உங்களை நீங்களே கோமாளிங்களா ஆக்காதீங்க.
ஜெய் ஹிந்த்!
நாளைக்கு நம்ம ஜகதீப் டன்கர் கதையோட வாரேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. குறிப்பாக அண்ணாமலையை தலைவராக்காத பாஜகக்கு மோடிக்கு, அமித்ஷாவுக்கு அரசியல் கற்று கொடுக்கும் தமிழக மிஸ்ட்கால் பாஜகவினர், சோஷியல் மீடியா அரசியல் எக்ஸ்பர்ட்டுகள், மறக்காம கைல கிடைக்கும் திட்டுகள், அட்வைசுகள், வசவுகளோட தயாரா வந்துருங்க.
சுந்தர்ஜி
சரியா.🇮🇳🚩🪷💪🙏

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக