ஞாயிறு, 20 ஜூலை, 2025

கள்ள குடியேறிகள்


 2014 முதல் பங்களாதேஷ் பார்டரை எப்படியாவது அடைக்க வேண்டும் என முயற்சித்த மத்திய அரசுக்கு,

மமதா பேகம் எல்லா தடைகளையும் செய்து கொண்டே வந்தார்.
இரண்டு பக்கமும் கடத்தல் மிகப் பிரசித்த தொழில், ஆட்கள், மாடுகள், அரிசி, கோதுமை, கஞ்சா என சகலமும் கடத்தப் பட்டது.
போலி ஆதார், வாக்காளர் அட்டை கொடுப்பது மிகப்பெரிய பிசினசாக வளர்ந்து வந்து கொண்டிருந்தது.
பங்களாதேஷிகள் பலர் இந்திய அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு, கடத்தலுக்கு மட்டுமின்றி, வேலை செய்ய, தேர்தலில் வாக்களிக்க வந்து சென்று கொண்டு இருந்தனர். பலரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில வாக்காளர் அட்டைகளும் உண்டு.
2020ல் எல்லைக்கு அருகில் திடீரென பல இடங்களில், பழைய சாமான்கள் வாங்கி விற்கும் கடை உருவானது.
ஒன்றிரண்டு ஆட்கள் எதையோ கொண்டு வருவார்கள், கொண்டு செல்வார்கள். மற்றபடி என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது, கேட்பதும் இல்லை.
சாதாரண லுங்கி, அழுக்கான சட்டை, தாடி என்பது மட்டுமே அடையாளம். BSF கூட இவர்களை கண்டு கொள்வதில்லை.
அப்பப்ப கொஞ்சம் பணம் வாங்கி கொள்வது மட்டும் சரியாக செய்து விடுவார்கள்.
2020-23 வரை திடீரென பல BSF வீரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பணம் வாங்கி கொண்டு, கடத்தலுக்கு உறுதுணையாக இருந்ததாக குற்றம் சாட்டப் பட்டது. BSF அதிகாரிகள் இதனை மறுத்தனர்.
தொடர்ந்து இவர்களின் மனைவிகள், உறவினர்கள் செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிலர் வங்காளத்தின் கிராமங்களில், ஒரிசா, கர்நாடகா,கேரளா, உபி, என நாடு முழுவதும் சுமார் 3000க்கும் மேற்பட்ட BSF குடும்பத்தினர் இதில் சிக்கினர்.
விஷயம் ரொம்ப சிம்பிள், இவர்கள் தங்கள் உறவினர் செல்ஃபோன் எண்ணை கடத்தல்காரர்களிடம் கொடுப்பார்கள், கடத்தல் அல்லது ஆட்கள் நுழைவதற்கு ஏற்ப இவ்வளவு என தொகை, அதில் UPI மூலம் செலுத்தப்படும்.
எனவே இவர்களை எதுவும் செய்ய இயலாது என்று எண்ணினர். 50க்கும் மேற்பட்ட கடத்தல் தலைவர்களின் செல்ஃபோன் களும் பறிமுதல் செய்யப்பட்டு, BSF உறவினர்களின் நம்பர்களில் வந்த தொகையுடன் நிரூபிக்கப் பட்டது.
கிட்டத்தட்ட 350 கோடிகள் இப்படி பரிமாற்றம் நடந்ததை நிரூபித்தனர்.
இதற்கு பிறகு புதிய BSF வீரர்கள், அதிகாரிகள் அங்கே களம் இறக்கப் பட்டனர். அதற்கு பிறகு கடந்த ஓரிரு வருடங்களில் நடப்பது உங்களுக்கு தெரிந்ததே.
மே வங்கத்தில் ஒரு மிஷன் நடந்து கொண்டு உள்ளது. அரசியல்வாதிகள் எல்லா கட்சியினரும், பொதுமக்கள், மத்திய மாநில அதிகாரிகள் பலரும் இதில் கூட்டு,
வெறும் பணத்திற்க்காக இந்திய இறையாண்மையை கொல்கின்றனர்.
சரி நடுவில் யாரோ பழைய சாமான் கடை வைத்ததாக எதற்கு எழுதினாய் என்று கேட்பவர்களுக்கு,
அவர்கள் IB அதிகாரிகள், சாதாரண கிழிந்த அழுக்கான துணிகளில் அங்கேயே அமர்ந்து கொண்டு, கிடைத்ததை உண்டு,
அனைத்தையும் கண்காணித்து தகவல்களை சேகரித்தனர்.
அந்த கயலான் சாமான் கள் நடுவே நவீன எலக்ட் ரானிக் கருவிகள் மூலம் தகவல்கள் டில்லிக்கு அனுப்பப் பட்டு, அனைவரின் மொபைல்கள் கண்காணிக்கப் பட்டு, சரியான நேரத்திற்கு காத்திருந்து, 2 நாளில் மொத்தமும் சரிசெய்யப் பட்டது.
ஏ மோடி, வேலி போட்டு அடைக்க 10 வருடமா என்று கேட்பவர்களுக்கு
வேலியே பயிரை மேயும் கதைகள் தெரிய நியாயமில்லை.
இது ஒரு தகவல் மட்டுமே. இது போல பல கதைகள் இந்த மிஷனில் உண்டு.
சுந்தர்ஜி
ஜெய் ஹிந்த்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக