யார், யாரெல்லாம் வருமான வரி கட்டுவது கிடையாது?
2. மொத்த வர்த்தகம் செய்பவர்கள் கூட, தங்கள் வருவாயை 30% முதல் 70% வரை குறைத்துக் காட்டி, மீதி உள்ள தொகைக்கே வரி கட்டுகிறார்கள்.
3. சினிமாக்காரர்கள், பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோரில் 5% பேர் கூட வரி கட்டுவதில்லை. அப்படியே கட்டினாலும், தாங்கள் கட்ட வேண்டிய உண்மையான வரியில் 10% கூட அரசுக்கு வரியாகச் செலுத்துவதில்லை.
4. கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சிப் பள்ளிகள் வரி கட்டுவதில்லை.
5. சிறுதொழில் (MSME Units) நடத்துபவர்களில் 10% பேர் வரி கட்டினால், அதுவே அதிகம்.
6. எஞ்சி இருக்கும் 90% பேரும், தங்கள் வருவாயையும், நிகர லாபத்தையும் 50%-ல் இருந்து வரை 90% குறைத்துக் கணக்கில் காண்பிக்கிறார்கள்.
7. சுயமாகத் தொழில் நடத்தும் மருத்துவர்கள், பட்டயக் கணக்கர்கள் (Chartered Accountants), நிதி நிர்வாகிகள் (Fund Managers) மற்றும் முதலீடு ஆலோசகர்கள் (Investment Bankers & Financial Consultants), வழக்கறிஞர்கள், நிர்வாக ஆலோசகர்கள் (Management Consultants), பொறியாளர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள் (Architects & Structural Engineers), கட்டிட உள்பகுதியைக் கவினுற வடிவமைப்பவர்கள் (Interior Decorators), தனியார் மற்றும் பொதுநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பவர்கள் (Event Managers), அழகுக் கலை நிபுணர்கள் (Beauticians) முதலியோர் வரி கட்டுவதில்லை. அல்லது வருவாயைக் குறைத்துக் காண்பிப்பதன் மூலம் தாங்கள் கட்ட வேண்டிய வரியில் 20% கூடக் கட்டுவதில்லை.
8. நாளொன்றுக்கு அதிக அளவில் வருமானம் ஈட்டும் மளிகைக் கடை வைத்திருப்பவர்கள், உணவகங்கள், காய்கறி, பழங்கள் மொத்த வியாபாரிகள், நிலம், சொத்து விற்பனைத் தரகர்கள், தையல் கடைக்காரர்கள், எந்திர/வாகனப் பட்டறை வைத்திருப்பவர்கள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் வைத்திருப்பவர்கள், மருந்துக் கடைக்காரர்கள், துணி/ஆயத்த ஆடைக் கடை வைத்திருப்பவர்கள் ஆகியோரில் 90% பேர் வருமான வரியோ, சரக்கு & சேவை வரியோ ஒரு ரூபாய் கூடக் கட்டுவதில்லை.
9. வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த உப தொழில்கள் நடத்தும் மனிதர்களும், நிறுவனங்களும், பல கோடி ரூபாய் வருமானம்/லாபம் ஈட்டினாலும், இப்போதிருக்கும் சட்டத்தின் படி, வேளாண்மை மூலம் கிடைக்கும் வருமானம்/லாபத்துக்கு ஒரு ரூபாய் கூட வருமான வரி.கட்டத் தேவை இல்லை. அத்தகைய வருமானம் 100 கோடி ரூபாய் ஆனாலும், அது தான் நம் நாட்டுச் சட்டம்.
10. சமூக சேவை செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் நிறுவனங்கள் வரி கட்டுவதில்லை.
11. தொண்டு நிறுவனங்கள் வரி கட்டுவதில்லை.
12. அறக்கட்டளை நடத்துபவர்கள் வரி கட்டுவதில்லை.
13. மத நிறுவனங்கள் எதுவும் வரி கட்டுவதில்லை.
14. அரசியல் கட்சிகள் வரி கட்டுவதில்லை.
15. கோடிக் கணக்கில் ஈட்டும் விளையாட்டுப் பயிற்சி நிறுவனங்களும், போட்டிகளை நடத்துபவர்களும் (உதாரணமாக, BCCI) வரி எதுவும் செலுத்துவதில்லை.
16. மனமகிழ் மன்றங்கள் (Recreation Clubs) வரி கட்டுவதில்லை.
17. தொழிற்சங்கங்கள் (Trade Unions) வரி கட்டுவதில்லை.
18. கலை மற்றும் பண்பாட்டுக் கூடங்கள் மற்றும் இயக்கங்கள் (Cultural Societies & Fine Arts Clubs) வரி கட்டுவதில்லை.
19. ஊடகங்கள் முதலில் சில வருடங்களுக்கு வரி கட்டுவதில்லை. பின்னர், தங்கள் வருவாயில் 75%-ஐ மறைத்து, மீதி இருக்கும் வருவாய்க்குத் தான் வரி கட்டுகிறார்கள்.
20. விளம்பர நிறுவனங்கள் கதையும் அதுவே.
21. பொருட்காட்சிகள் நடத்துவோர் வரி செலுத்துவதில்லை.
22. வீடு/கடை/அலுவலக வாடகை மூலம் அதிக அளவில் மாத வருமானம் (ரூ.20 ஆயிரத்துக்கு மேல்) பெறுகிறவர்கள், அதைத் தங்கள் கணக்கில் காட்டுவதில்லை. இல்லையேல், அதில் ஒரு சிறு பகுதியை மட்டுமே கணக்கில் காட்டுகிறார்கள்.
23. இவர்கள் எல்லோரும் தங்களுக்குக் கிடைக்கும் லாபத்தின் (not Gross Receipts) மேல் நாணயமாக வரி கட்டினால், அரசுக்கு இப்போது கிடைக்கும் வரி வருவாயைப் போல 100 மடங்கு கிடைக்கும்.
24. பல நூறு கோடி ருபாய் கறுப்புப் பணம் சம்பாதிப்பவர்களைப் பற்றிப் பேசவே வேண்டியதில்லை.
அவர்கள் பேருக்கு ஏதோ கொஞ்சம் வருமான வரி கட்டி விட்டுத் தப்பித்துக் கொள்கிறார்கள்.
'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்பது போல, மாதச் சம்பளம் வாங்கிப் பிழைப்பவன் தான் ஒழுங்காக வரி கட்டுகிறான்.
ஏனென்றால், வருமான வரி பிடித்தம் செய்தது போக, மிச்சத் தொகை தானே அவன் கைக்குக் கிடைக்கிறது?
சுந்தர்ஜி
SANGI IT WING
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக