*ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்று தீரும் என்ற உண்மை*
மதுரையில் நடைபெற்ற முருகபக்தர்கள் மாநாட்டை "இது பிஜேபி வேற பேர்ல நடத்துன மாநாடு" என்று மிகச் சாதாரணமாக கூறியதைக் காணமுடிந்தது.
ஆனால் இந்த மாநாடு ஒரு "Case study for organising the huge gathering irrespective of government hurdles" என்று அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
ஒரு மாநாடு எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது என்பதை அவர்கள் அலட்சியப்படுத்த முனைகிறார்கள் என்பதே உண்மை.
ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையில் முப்பத்தி ஏழு அமைப்புகள் வேலை செய்ய இந்து முன்னணி இதை முன்னின்று நடத்தியது.
அந்த முப்பத்தி ஏழு அமைப்புகளில் பா.ஜ.கவும் ஒன்று அவ்வளவே!
வழக்கறிஞர்கள் அமைப்பின் வேலை அசாத்தியமானது.
காவல்துறை அனுமதி மறுக்க அவர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, பின்னர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தாலும்,
காவல்துறை அதிகாரியிடம் ஒவ்வொரு வாகனமும் அனுமதி வாங்க வேண்டும் என்ற முடிவை எதிர்த்து ஒரே நாள் இரவில் தகுந்த ஆவணங்களுடன் உச்ச நீதிமன்றம் சென்றது,
பிறகு சில மணி நேரங்களில்
உயர்நீதிமன்றத்தின் மூலமாகவே அந்த தடையை நீக்கியது என தொடர்ந்து அவர்கள் ஆற்றிய சேவை அளப்பரியது.
தமிழக அரசின் ஏவலாளி போல் காவல்துறை நடந்து கொண்டது,
ஒவ்வொரு மணி நேரமும் இந்த மாநாட்டை முறியடிப்பதற்காக ஏதோவொரு நிபந்தனையை விதித்துக் கொண்டேயிருந்தது.
ஆனால் இறைசக்தி உடன் இருந்ததால் எல்லாமே தவிடுபொடியானது.
ஆறுபடை வீடு அமைக்க அனுமதி மறுக்கப்பட,
நீதிமன்றம் மூலமாக அனுமதி கிடைக்க சஷ்டியன்று ஆறுபடை வீடு திறக்கப்பட்டது.
முதல்நாள் கூட்டம் வரவில்லை, பிறகு ஒவ்வொரு நாளும் கூட்டம் அலைமோதியது. மூன்று லட்சம் மக்கள் ஆறுபடை வீட்டை தரிசனம் செய்தனர்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தாலும் நெரிசல், தள்ளுமுள்ளு இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாக தரிசித்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் கையாளுவதற்கு எளிதாக அனைவருக்கும் உலர் பருப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
இதன்மூலம் தமிழ்நாட்டின் அறங்கெட்டதுறைக்கு, எவ்வளவு கூட்டம் வந்தாலும் கட்டணமில்லாமல் அமைதியாக இறைவனை தரிசிக்க இயலும் என்று சுட்டிக் காட்டப்பட்டது.
இந்த மாநாட்டிற்காக நூற்றுக்கணக்கான பைட்டக்குகள் வெவ்வேறு அளவில், வெவ்வேறு அமைப்புகளில் நடைபெற்றன.
இந்த மாநாடு Micro management at Macro level.
மருத்துவ ஏற்பாட்டை மாநாடு நடத்துபவர்களே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அதன் காரணமாக பல மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு மருத்துவர், ஆண் பெண் செவிலியர், உதவியாளர்கள் இருந்தனர்.
மொத்தம் 170 பேர்கள் இதில் 160 பேர் புதிதாக தொடர்புக்கு வந்தவர்கள். அத்துடன் 28 மருத்துவமனைகளுடன் புதிதாக தொடர்பு ஏற்பட்டது.
அவர்கள் ஸ்ட்ரெச்சர், வீல்சேர் போன்றவற்றை வழங்கினர். பத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுடன் அவசரகால உடனடி மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பத்து ஆம்புலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. குழுவில் உள்ள மருத்துவர்களின் பதிவு எண், செவிலியர் விவரங்கள், ஆம்புலன்ஸ் எத்தனை வருடம் பழையது,
எப்.சி எடுக்கப்பட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அனைத்து விவரங்களும் கோப்பாக தொகுத்து வழங்கப்பட்டது.
மாநாடு அன்று மட்டும் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு அன்று சுமார் 78 பேருக்கு முதலுதவி வழங்கப்பட்டது.
அரசின் நெருக்கடி காரணமாக புதிதாக மருத்துவமனைகள் தொடர்பு, மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்பு கிடைத்தது நமக்கு லாபமே!
விஷ்வ ஹிந்து பரிஷத் சுமார் 750 மடாதிபதிகள், ஆதினங்கள், குருமார்களைத் தொடர்பு கொண்டு அழைத்தது.
அரசைப் பகைத்துக் கொள்ள விரும்பாத ஆதினங்கள் ஆசிகளோடு நிறுத்திக் கொண்டார்கள். பலர் புதிதாக விரும்பி வந்தனர்.
அன்று மேடையில் மொத்தம் 85 ஆன்மிக குருமார்கள் அமர்ந்திருந்தனர்.
டோல்கேட்டிலும், மதுரையில் நுழையும் சாலைகளிலும் காவல்துறை தேவையில்லாத தொந்தரவுகளை ஏற்படுத்தினர்.
இதை சமாளிக்க மதுரையில் உள்ள எட்டு நுழைவுச் சாலைகளிலும் வழக்கறிஞர் குழு அமைக்கப்பட்டு, காவல்துறை ஏற்படுத்தும் பிரச்சினைகளை சமாளித்தனர்.
ஒவ்வொரு குழுவிலும் பத்து வழக்கறிஞர்கள் இடம்பெற்றனர்.
மாநாட்டு திடலில் இருபத்தைந்து வழக்கறிஞர்கள் உள்ள குழு தீவிரமாக கண்காணித்தது.
ஒவ்வொரு நுழைவுச் சாலையிலும் வெளியூரில் இருந்து வந்த வாகனங்களில் உள்ளோருக்கு நீர் மற்றும் தின்பண்டங்கள் வழங்கப்பட்டன.
மாநாட்டு திடலில் மக்கள் அமர்வதற்கு ஐம்பது பாக்ஸ்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பாக்ஸுக்கும் ஒரு குடிநீர் டாங்க் அமைக்கப்பட்டது.
ஒவ்வொரு பாக்ஸிலும் குப்பைகள் போட ஒரு ட்ரமும், குப்பைகளை சேகரிக்க மூன்று சாக்குப் பைகளும் வைக்கப்பட்டன.
வெளியூரில் இருந்து வந்த வாகனங்கள் நிறுத்த மூன்று இடங்களை காவல்துறை அனுமதித்தது.
வேண்டுமென்றே மூன்று நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிறுத்தங்களையே தேர்வு செய்தனர்.
அவ்வளவு தூரம் மக்கள் நடந்து வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். இயலாதவர்களை அழைத்துச் செல்ல சுமார் இருபது ஆட்டோக்கள் உடனே ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் அதற்கும் காவல்துறை கெடுபிடி செய்ய சுமார் 170 இருசக்கர வாகனங்கள் களமிறக்கப்பட்டன. அவர்கள் முதியவரையும் பெண்களையும் அழைத்து வந்தனர்.
வாகன நிறுத்தங்களில் இருந்து, இரு சக்கர வாகனங்களில் அழைத்து வரப்பட்டவர்களின் எண்ணிக்கை 14000 பேர்கள்!
புட் கோர்ட்டில் எந்த அடுப்புகளையும் பயன்படுத்தக்கூடாது என்று மாநாடு அன்று காலையில் காவல்துறை தடை விதித்தது.
பிறகு வியாபாரிகளிடம் காவல்துறையின் அராஜகத்தை எடுத்துக்கூறி, மாநாட்டுத்திடலில் இருந்து சுமார் அரைகிலோ மீட்டர் தூரத்தில் சாலைக்கு அப்புறம் அடுப்புகள் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சமைத்து புட் கோர்ட்டுக்கு எடுத்து வரப்பட்டது.
இறுதியில் காவல்துறை மாநாட்டுக்கு பாதுகாவல் தர முடியாது என்று கூறிவிட்டது.
சுமார் 1200 ரக்ஷக்குகள் களமிறக்கப்பட்டனர். அவர்கள் மிகவும் அன்புடனும் அதே சமயம் கண்டிப்புடன் கொடுத்த கட்டளைகளை நிறைவேற்றினர்.
மாநாட்டு திடலில் ஒரு சிறு அசம்பாவிதமோ, குழப்பமோ இல்லை. காவல்துறையை விட இந்து அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மிகச் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர்.
அ பா.வி.ப (ABVP) இன்னும் சில அமைப்புகள் மாநாடு முடிந்தவுடன், திடலில் உள்ள குப்பைகளை சேகரித்து மூட்டைகளாக கட்டி வைத்தனர்.
ஐம்பது குடிநீர் தொட்டிகள் ஏற்பாடு செய்ததுடன் சுமார் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தது.
அடிக்கும் வெயிலுக்கு தண்ணீர் இருப்பு போதாது என்று இருந்தபோது, சரியாக 3.10 மணிக்கு வாட்டிய வெயில் மாறி சண்டமாருதம் வீசத் தொடங்கியது.
மாநாடு நடந்த போது அவ்வப்போது சிறு தூறல் விழுந்து கொண்டேயிருந்தது. ஆனாலும் யாரும் அசையவில்லை, எழுந்து செல்லவில்லை.
திடலின் இருபகுதியிலும் சுமார் ஒரு லட்சம் பேர் மண் தரையில் அமர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
மாநாடு முடிந்த ஐந்து நிமிடத்திற்குள் அனைத்து சேர்களும் அடுக்கி வைக்கப்பட்டன.
மாநாட்டிற்காக சுமார் 4000 பேர் வேலை செய்தனர். 200க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
சில காவல்துறை அதிகாரிகள் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசினர். ஆனாலும் நம் சகோதரர்கள் மாநாடு முக்கியம், மான அவமானங்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியுடன் செயல்பட்டனர்.
மொத்தம் 21 கிலோமீட்டர் அளவிற்கு சாலைகளில் வாகனங்கள் தேங்கி நின்றன.
மாநாடு நடந்த சாலையில் வாகனங்கள் போக்குவரத்து அன்று மட்டும் 37 மடங்கு அதிகரித்ததாக அதிகாரிகள் மற்றும் டோல்கேட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் டோல்கேட்டில் உள்ளவர்கள் முதன்முறையாக டோல்கேட் பகுதியில் எந்த சச்சரவுகளும் இல்லாமல் மாநாட்டிற்கான வாகனங்கள் வந்து சென்றன என்று கூறினர்.
179 யூடியூப் சேனல்கள் மாநாடு முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்தன.
ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கந்தசஷ்டி கவசம் பாடினர். மாநாடு வெற்றிபெற வேண்டும் என்று பலர் விரதமிருந்து மாலையணிந்து பணிகள் செய்தனர்.
மாநாட்டுக்கு வந்தவர்கள் அனைவரும் தங்கள் சொந்த செலவிலே வந்தனர். ஒருவர் கூட குடித்துவிட்டு வரவில்லை.
அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் அதிகமாகவில்லை.
அர்ப்பணிப்பும் இறைவன் அருளும் இருந்ததால் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது.
சரியான வழிகாட்டுதல் இருந்தால் இந்துக்கள் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பொதுவெளியில் கடைப்பிடிப்பார்கள் என்று இந்த மாநாடு தெளிவுபடுத்தியது.
இறுதியாக இந்த அரசும் இந்த அரசை நடத்துபவர்களும் தமக்கு எதிராக உள்ள சித்தாந்தத்தை எதிர்கொள்ள திராணியற்ற கோழைகள் என்பதை இந்த மாநாடு நிரூபித்தது.
கந்தனுக்கு அரோகரா...
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக